• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நெல் தவிர ஏனைய பயிர்களை பயிரிடுவதற்குத் தேவையான இரசாயனப் பசளைகளை விவசாயிகளுக்கு முறையாக பகிர்ந்தளிக்கும் பொருட்டு வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்
- உலகளவில் COVID-19 தொற்று நிலைமையின் கீழ் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் மீது தாக்கத்தைச் செலுத்தியுள்ள காரணிகளினால் உணவு விநியோகத்தின்பால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்க்கும் பொருட்டு மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் 'சுபீட்சத்தின் வீட்டுத் தோட்டம்' மற்றும் இனங்காணப்பட்டுள்ள 88,000 ஹெக்டயாரில் 16 வௌிக்களப் பயிர்களை பயிர்செய்தல் போன்ற பல நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன. இந்த நிலைமையின் கீழ் நெல் தவிர ஏனைய பயிர்களுக்குத் தேவையான இரசாயனப் பசளைகளை விவசாயிகளுக்கு முறையாகவும் தட்டுபாடற்ற விதத்திலும் வழங்கும் பொருட்டு பின்வரும் நடவடிக்கை களையும் உள்ளடக்கி அமுல்படுத்தப்படவுள்ள நிகழ்ச்சித்திட்டமானது மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் அமை்சசரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதுடன், இந்த விடயங்கள் அமைச்சரவை யினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

* 'சுபீட்சத்தின் வீட்டுத் தோட்டம்' அடங்கலாக சிறிய அளவிலான விவசாய பயிர்ச் செய்கைகள் சார்பில் சேதனப் பசளை பாவனை ஊக்கப்படுத்தப்படுவதோடு, தேவைப்படுமாயின் மாத்திரம் 10 கிலோ கிராமுக்கு குறைந்த அளவிலான இரசாயனப் பசளையை திறந்த சந்தையில் கொள்வனவு செய்வதற்கு இடமளித்தல்.

* நெல் தவிர்ந்த ஏனைய பயிர்ச் செய்கைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட மானிய பசளை பங்கின் 50 சதவீதம் திறந்த சந்தையின் ஊடாகவும் மீதி 50 சதவீதம் கமநல அபிவிருத்தி நிலையங்கள் ஊடாகவும் வழங்குதல்.

* கமத்தொழில் திணைக்களம், மாகாண கமத்தொழில் திணைக்களம் மற்றும் இலங்கை மகாவலி அதிகாரசபை என்பவற்றின் மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தப்படும் மரக்கறி, பழ வகைகள் போன்ற செய்கைகளுக்குத் தேவையான மானிய இரசாயனப் பசளை கமநல அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக வழங்குதல்.

* கமநல அபிவிருத்தி நிலையங்களில் தேவைப்படும் பசளை இல்லாத சந்தர்ப்பங்களில் அல்லது தாமதமாகுமென தெரியவரும் சந்தர்ப்பங்களில் கமத்தொழில் ஆராய்ச்சி, உற்பத்தி உதவியாளரினால் வழங்கப்படும் பற்றுச்சீட்டின் மீது திறந்த சந்தையில் விவசாயிகளுக்கு பசளைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் வழிமுறையொன்றைத் தயாரித்தல்.