• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனி பல்கலைக்கழகத்தில் கணனி மற்றும் தொழினுட்ப பீடத்திற்கான கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியளிப்பின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் விஞ்ஞான மற்றும் தொழினுட்ப மனிதவள அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் களனி பல்கலைக்கழகத்தில் கணனி மற்றும் தொழினுட்ப பீடத்திற்கான கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறும் 3,032.70 மில்லியன் ரூபாவுக்கு (வரியின்றி) M/s. Maga - ICC கூட்டுத் தொழில்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.