• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலகளவில் COVID-19 தொற்று நிலைமையின் கீழ் வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களின்பால் தாக்கத்தைச் செலுத்தும் துறைகள் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சினாலும் வௌிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களினாலும் எடுக்கப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கைகள்
- உலகளவில் COVID-19 தொற்று நிலைமையின் கீழ் வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களின்பால் தாக்கத்தைச் செலுத்தும் துறைகள் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சினாலும் வௌிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களினாலும் எடுக்கப்பட்டுள்ள பின்வரும் நடவடிக்கைகள் வெளிநாட்டு உறவுகள் அமைச்சரினால் அமைச்சரவையின் கவனத்திற்கு முன்வைக்கப்பட்டது.

* 2020 யூன் மாதம் 16 ஆம் திகதியன்றுக்கு 117 நாடுகளிலுள்ள 52,401 இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்துள்ளமை.

* சனாதிபதி செயலகம் COVID செயலணியுடன் இணைந்து ஏற்கனவே 38 நாடுகளிலிருந்து 9,580 மேற்பட்ட இலங்கையர்களை நாட்டிற்கு மீண்டும் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை.

* அதேபோன்று மேலும் 10 நாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு மீண்டும் கொண்டுவருவதற்காக யூன் மாதம் 24 ஆம் திகதியிலிருந்து யூலை மாதம் 07 ஆம் திகதி வரை பத்து (10) விமான பயணங்களை ஏற்பாடு செய்துள்ளமை.

* மத்திய கிழக்கு மற்றும் வேறு இடங்களில் அனர்த்தத்திற்குள்ளாகக் கூடிய பிரிவினருக்கு உலர் உணவு, அடிப்படை மருந்துகள், பாதுகாப்பு கருவிகள், மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து என்பன பொருட்டு 42.6 மில்லியன் ரூபாவுக்கு மேல் இலங்கை தூதரகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை.

* பொருள் பற்றாக்குறை நிலவும் மற்றும் உலர் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாதுள்ள மாலைதீவு, ஐக்கிய அரபு எமீர் குடியரசு மற்றும் கட்டார் போன்ற நாடுகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் உட்பட மருந்துகள் அடங்கிய 15.5 மில்லியன் ரூபா பெறுமதி மிக்க 5,000 பொதிகளை அனுப்பிவைப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை.

* வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் தேவைகள் சார்பில் அந்தந்த நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள் தேவையானவாறு இராஜதந்திர தலையீடுகளை மேற்கொள்வதோடு, இலங்கையர்களுடன் தொடர்புகளை பேணி வருகின்றமை.

* இலங்கை தூதரகங்கள் செயற்படாத நாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு அண்மையிலுள்ள இலங்கை தூதரகங்களின் ஊடாக தேவையான சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை.

* அதேபோன்று இந்த உலகளவிலான தொற்று காரணமாக இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதார தாக்கங்களைக் குறைப்பதற்கும் பொருளாதார புத்துயிரளிப்புக்குமாக இலங்கை தூதரகங்களினால் புதிய சந்தைகளை இனங்காண்பதற்கும் தற்போதுள்ள சந்தைகளில் காணப்படும் கேள்விகளை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை.