• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலக வங்கி குழுவின் சருவதேச அபிவிருத்தி அமைப்பானது COVID - 19 அவசர தேவைகளுக்காக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ள நிதி ரீதியிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரித்தல்
- உலக வங்கி குழுவின் சருவதேச அபிவிருத்தி அமைப்பினால் நிதியளிக்கப்படும் பின்வரும் கருத்திட்டங்களில் இதுவரை பொறுப்புக்கள் செய்துகொள்ளப்படாத 60 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை COVID - 19 காரணமாக பாதிக்கப் பட்டுள்ள சமூகப் பிரிவுகளை இலக்காகக் கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு சருவதேச அபிவிருத்தி அமைப்பானது உடன்பாடு தெரிரவித்துள்ளது.

* போக்குவரத்து தொடர்பு மற்றும் சொத்துக்கள் முகாமைத்துவக் கருத்திட்டம்.

* சுற்றாடல் முறைமைப் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவக் கருத்திட்டம்

* காலநிலை மாறுபாட்டுக்கு ஏற்ற கமத்தொழில் - நீர்ப்பாசன அபிவிருத்தி கருத்திட்டம்.

அதேபோன்று சருவதேச அபிவிருத்தி அமைப்பின் இடைநிலை உதவி கடன் வசதிகளின் கீழ் 05 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களும் தொற்றுக்கான அவசர நிதி வசதிகளின் கீழ் 1.72 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களும் கொண்ட கொடையொன்றை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க இந்த நிதியினைப் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பானது 2020 யூன் மாதம் 03 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், சருவதேச அபிவிருத்தி அமைப்பானது இடைநிலை உதவி கடன் வசதிகளின் கீழ் மேலும் 22.24 ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க பெற்றுக் கொள்ளப்படவுள்ள மொத்த நிதித் தொகைாயானது 87.24 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துக் கொள்வதற்கும் இந்த நிதியினை COVID - 19 பரவல் காரணமாக சமூகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரிவினரை இலக்காகக் கொண்ட சமூகப் பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்குமாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச் சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.