• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு துறைமுக நகரத்தில் CHEC PORT CITY COLOMBO (PRIVATE) LIMITED கம்பனி மூலம் பிரேரிக்கப்பட்டுள்ள முதலீட்டுக்கு திறமுறை அபிவிருத்தி கருத்திட்ட நிலையை வழங்குதலும் ஊக்குவிப்புகளை வழங்குதலும்
- கொழும்பு துறைமுக நகர கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்காக இலங்கை அரசாங்கம் நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உள்நாட்டில் தாபிக்கப்பட்டுள்ள CHEC PORT CITY COLOMBO (PRIVATE) LIMITED கம்பனி என்பவற்றுக்கிடையில் முத்தரப்பு உடன்படிக்கையொன்று 2016 ஆகஸ்ட் மாதம் கைச்சாத்திடப்பட்டதோடு, இதற்கமைவாக இந்த கருத்திட்டத்தின் கீழ் 440 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணியானது நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய உடன்படிக்கையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த காணியிலிருந்து 116 ஹெக்டயார் விஸ்தீரணமடைய காணி கருத்திட்ட கம்பனியான CHEC PORT CITY COLOMBO (PRIVATE) LIMITED கம்பனிக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படுதல் வேண்டும். இதன் பிரகாரம் இவ்வாறு குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ள காணியிலிருந்து 6.8 ஹெக்டயாரில் 5 கோபுரங்களைக் கொண்ட களப்பு அபிவிருத்திக் கருத்திடடமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரிப்பொன்று இந்தக் கம்பனி இலங்கை முதலீட்டுச் சபைக்கு சமர்ப்பித்துள்ளது. 10 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட முதலீட்டுடனான இந்த கருத்திட்டத்தின் முதலாம் கட்டமானது 400 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களையும் இரண்டாம் கட்டமானது 600 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களையும் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கருத்திட்டத்தின் திறமுறை ரீதியலான முக்கியத்துவம் மற்றும் அதன் பாரிய தன்மை என்பன பற்றி பரிசீலனை செய்து 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க திறமுறை அபிவிருத்தி கருத்திட்ட (திருத்த) சட்டத்திலும் 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இலங்கை முதலீட்டுச் சபை (திருத்த) சட்டத்திலும் உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் குறித்த முதலீட்டுக்குரிய ஊக்குவிப்புகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் திறமுறை அபிவிருத்தி கருத்திட்ட சட்டத்தின் கீழ் உரிய வர்த்தமானி அறிவித்தல்களை வௌியிடும் பொருட்டு கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.