• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட இலங்கை திரிபோஷா நிறுவனத்திற்கு 2020/2021 ஆம் ஆண்டு சார்பில் திரிபோஷா உற்பத்திக்காக 720 மெற்றிக் தொன் முழு ஆடைப் பால்மா பெற்றுக் கொள்வதற்கான கேள்வி
- உள்ளூர் பால் பண்ணையாளர்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் நோக்கில் 2014 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டுவரை திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான பால்மா வழங்கும் ஒப்பந்தமானது அமைச்சரவையின் அங்கீகாரத்தின் மீது வரையறுக்கப்பட்ட மில்கோ (தனியார்) கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, வரையறுக்கப்பட்ட இலங்கை திரிபோஷா நிறுவனத்திற்கு 2020/2021 ஆம் ஆண்டு சார்பில் திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான 720 மெற்றிக் தொன் முழு ஆடைப்பால்மா பெற்றுக் கொள்வதற்கான கேள்வி தொடர்பில் சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பானது அமைச்சரவை யினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, குறித்த பால்மாத் தொகையினை வரையறுக்கப்பட்ட மில்கோ (தனியார்) கம்பனியிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.