• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 தொற்று நோய்க்கெதிரான பணிகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு 800 யப்பான் யென்கள் கொண்ட கருத்திட்டமல்லாத யப்பான் மானிய உதவி“
- இலங்கையில் COVID - 19 தொற்று நோய்க்கெதிரான பணிகளைப் பலப்படுத்துவதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு 800 யப்பான் யென்கள் கொண்ட (அண்ணளவாக 1,360 மில்லியன் ரூபா) கருத்திட்டமல்லாத யப்பான் மானிய உதவியினை வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதன் கீழ் MRI Scanner, CT Scanner, Bedside X-Ray Systems, Central Monitors, Bedside Monitors மற்றும் Defibrillators போன்ற மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கிணங்க, இந்த மானியத் தொகையைப் பெற்றுக் கொள்வதற்கும் இது தொடர்பிலான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்குமாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.