• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 தொற்றின் பின்னரான சுற்றுலாத்துறைக்கு நிவாரணம் வழங்குதல்
- COVID - 19 தொற்று காரணமாக சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகளை குறைத்து சுற்றுலாத் தொழிலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் பொருட்டு பின்வருமாறு சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் ஆட்களுக்கும் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சித்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா ஹோட்டல்கள், பயண முடிவிட முகாமைத்துவ கம்பனிகள் / சுற்றுலா முகவர்கள் என்பவற்றின் பணியாட்டொகுதியைச் சேர்ந்த ஊழியர்களுக்கு ஆறு (06) மாத காலம் மாதமொன்றுக்கு 20,000/- ரூபா வீதம் செலுத்தும் பொருட்டு 4 சதவீத சலுகை வட்டியின் கீழ் 2 வருட சலுகை காலத்துடன் 5 வருட காலப்பகுதிக்குள் மீள செலுத்தும் அடிப்படையில் கடன் வசதிகளை வழங்குதல்.

* சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சிற்றுண்டிச்சாலைகள், உணவு வகைகளைப் பெற்றுக் கொள்ளும் இடங்கள், மசாஜ் நிலையங்கள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள் அடங்கலாக சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட ஏனைய நிறுவனங்களில் சேவை புரியும் ஆள் ஒருவருக்கு மாதமொன்றுக்கு 15,000/- ரூபா வீதம் ஆறு (06) மாத காலத்திற்கு சம்பளம் வழங்கும் பொருட்டு கடன் வசதிகளை வழங்குதல்.

* சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா வழிகாட்டுநர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருதடவை மாத்திரம் செலுத்தும் தொகையொன்றாக 20,000/- ரூபாவைக் கொண்ட கொடுப்பனவொன்றினை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் செலுத்துதல்.

* சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா சாரதிகள் ஒவ்வொருவருக்கும் ஒருதடவை மாத்திரம் செலுத்தும் தொகையொன்றாக 15,000/- ரூபாவைக் கொண்ட கொடுப்பனவொன்றினை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் செலுத்துதல்.

* 2020 மார்ச் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிவரை செலுத்தப்படவேண்டிய மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை 2020 செப்ரெம்பர் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 12 சமமான தவணைகளில் செலுத்துவதற்கு வசதிகளைச் செய்தல் மற்றும் இந்த காலப்பகுதிக்குள் மின்சாரம் அல்லது நீர் விநியோகத்தை துண்டிக்காதிருத்தல்.

* சுற்றுலாத் தொழிலின் பொருட்டு தவணைக் குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வாகனங்கள் சார்பில் வழங்கப்பட்டுள்ள ஆறு (06) மாத சலுகைக் காலத்தை தாமதக் கட்டணம் அறவிடாது 12 மாதங்கள் வரை நீடித்தல்.