• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அநுராதபுரம் மிரிசவெட்டிய மகா விகாரைக்கு அண்மையில் அமைந்துள்ள வனப் பாதுக்காப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியை புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சுக்கு வழங்குதல்
- மிரிசவெட்டிய மகா விகாரைக்கு அண்மையில் அமைந்துள்ள ஏக்கர் 2 சேர்ச்சர்ஸ் 22.6 விஸ்தீரணமுடைய காணித் துண்டில் வனப் பாதுக்காப்புத் திணைக்களத்தின் சுற்றுலா பங்களா நடாத்திச் செல்லப்படுகின்றது. இந்த காணியானது அநுராதபுரம் புண்ணிய பிரதேசத்தினுள் அமைந்துள்ளமை யினாலும் தொல்பொருட்களைக் கொண்ட பிரதேசமொன்றாகையினாலும் அதில் புதிதாக நிர்மாணிப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படலாகாதென தொல்பொருளியல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய காணித் துண்டு மிரிசவெட்டிய மகா விகாரைக்கு அண்மையில் அமைந்துள்ளமையினால் இது விகாரையின் எதிர்கால மத மற்றும் சமூக ரீதியிலான பணிகளை நடாத்திச் செல்லும் வசதி கருதி இந்த விகாரைக்கு வழங்குமாறு விஹாராதிபதி அவரக்ளினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, எதிர்காலத்தில் முறையாக புண்ணிய பூமிக்கான எல்லைகள் பிரகடனப்படுத்தப்படும் போது புண்ணிய பூமி அபிவிருத்திக் குழுவின் அங்கீகாரத்தின் மீது மிரிசவெட்டிய மகா விகாரைக்கு வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் குறித்த காணித் துண்டை புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சுக்கு குறித்தொதுக்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.