• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்திய கடன் வசதியின் கீழ் சூரிய சக்தி கருத்திட்டங்களை செயற்படுத்துதல்
- 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக நாட்டின் வலுசக்தி துறையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியினை சேர்ப்பதற்கான குறியிலக்கினை அடைவதற்குரியதாக சூரிய சக்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் வழியினை இந்தியாவின் EXIM வங்கியூடாக வழங்குவதற்கு இந்ததிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தின் கீழ் அரசாங்க கட்டடங்களின் கூரைகளின் மீது சூரியசக்தி பலகங்களை பொருத்துவதன் மூலம் குறித்த நிறுவனங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கும் மன்னார், திருகோணமலை, மொனராகலை, அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வீடுகளுக்கு சூரியசக்தி பலகங்களை வழங்குவதன் மூலம் அவர்களுடைய மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் முன்னுரிமையளித்து உரிய கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.