• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் e-Motoring கருத் திட்டதிற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு மேலதிக நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்ளல்
- மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் பொதுமக்களை மையப்படுத்தும் வகையில் மாற்றுவதற்காக திட்டமிடப்பட்டுள்ள e-Motoring கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தமானது Metropoliton Advance Technologies (Pvt) Ltd கம்பனிக்கு 2018 யூலை மாதம் கையளிக்கப்பட்டு, உரிய உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டுள்ளன. இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரியதாக திணைக்களத்தின் நாராஹேன்பிட்ட பிரதான அலுவலக மனையிடம் மற்றும் மாவட்ட அலுவலக மனையிடங்கள் என்பன பொருத்தமானவாறு ஒழுங்கு செய்யவேணடியுள்ள போதிலும் அதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் கிடைக்காததன் காரணமாக இந்த கருத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தலானது தாமதமாகியுள்ளது. உரிய முறையில் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அத்தியாவசிய மற்றும் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை நிறைவேற்றும் பொருட்டு தேவையான நிதி ஏற்பாடுகள் எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.