• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொது பயணிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் பேருந்து களுக்குரிய ஆகக்குறைந்த தகவுதிறன்களை அறிமுகப்படுத்துதல்
- இலங்கை போக்குவரத்துச் சபையினாலும் தனியார்துறையினாலும் பயணிகள் போக்குவரத்துக்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 26,985 ஆகுமென்பதோடு, இவை யாவும் பொருட்கள் கொண்டு செல்வதற்கான லொறி அடிச்சட்டத்தின் மீது நிர்மாணிக்கப்பட்ட பேருந்துகளாகும். இவை பொருட்கள் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளமையினால் வண்டியின் தடைப்பொறியினை பயன்படுத்தும் சந்தர்ப்பங் களில் பயணிகள் சிரமங்களுக்கு ஆளாவது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், பயணிகளுக்கு வசதியாக பயணம் செய்வதற்கு இயலுமாகும் வகையில் பொருத்தமான பேருந்துகளை எதிர்காலத்தில் இறக்குமதி செய்யும் போது கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய தகவுதிறன்களை தயாரிப்பதற்காக நியமிக்கப் பட்டுள்ள உத்தியோகத்தர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலுள்ள விடயங்களை உரிய உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மேலும் ஆராய்ந்து அமைச்சரவைக்கு சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு பின்வரும் அமைச்சர்களை உள்ளடக்கிய உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர்.

* கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர்.

* கல்வி அமைச்சர்.