• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'சுரக்‌ஷா' மாணவர் காப்புறுதி காப்பீடு
- 'சுரக்‌ஷா' மாணவர் காப்புறுதி காப்பீடு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் காப்புறுதி காப்பீட்டினை வழங்கிய Allianz Insurance நிறுவனத்துடன் உள்ள ஒப்பந்தமானது 2020 மே 31 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. இந்த காப்புறுதி நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் பலப்படுத்தும் பொருட்டிலான சிபாரிசுகளைப் பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மாணவர் காப்புறுதி காப்பீட்டிற்காக காப்புறுதி சேவைகளை வழங்கும் நிறுவனமொன்றை தெரிவுசெய்யும் போது அரசாங்க காப்புறுதி நிறுவமொன்றின் ஊடாக உரிய சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் இதற்கிணங்க காப்புறுதி நிறுவனமொன்றை தேர்ந்தெடுக்கும் வரை 2020‑06‑01 ஆம் திகதியிலிருந்து 2020‑03‑30 ஆம் திகதி வரை இலங்கை கா்பபுறுதிக் கூட்டுத்தாபனத்திடமிருந்து உரிய காப்புறுதி சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.