• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Sri Lanka Poultry Development Company (Private) Limited கம்பனியை தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பண்ணையொன்றாக நடாத்திச் செல்தல்
- தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான 51 சதவீதம் மற்றும் Libyan Arabic Foreign Investment கம்பனிக்குச் சொந்தமான 49 சதவீதம் என்னும் அடிப்படையில் Libyan Agricultural and Livestock (Pvt.) Limited (LANLIB) கம்பனியானது 1981 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. Libyan Arabic Foreign Investment கம்பனிக்குச் சொந்தமான 49 சதவீதமான பங்குகள் 2014 ஆம் ஆண்டில் தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபையினால் கொள்வனவு செய்யப்பட்டு Sri Lanka Poultry Development Company (Private) Limited நிறுவனமாக நடாத்திச் செல்லப்படுகின்றது. தற்போது இந்தக் கம்பனியானது கடும் நிதிப் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதோடு, அதன் நிருவாக மற்றும் முகாமைத்துவ பணிகளும் சீரற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ் Sri Lanka Poultry Development Company (Private) Limited கம்பனியை கலைத்து மூடி இந்தக் கம்பனியின் கீழ் நடாத்திச் செல்லப்பட்ட மாவத்த பண்ணை மற்றும் அதன் பணியாட்டொகுதியை தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபைக்கு கையளிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.