• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய அளவிலான கமத்தொழில் திட்ட பங்களிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் உச்ச கடன் எல்லையை அதிகரித்தலும் விவசாய பெறுமதி சங்கிலி அபிவிருத்தி கருத்திட்ட முயற்சி ஆக்குநர்களுக்கு இணைப்பொருத்த கடன் மற்றும் இணைப்பொருத்த மானியங்களை வழங்குதல்
- கமத்தொழில் அபிவிருத்திக்கான சருவதேச நிதியம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியம் என்பவற்றின் மூலம் கிராமிய சிறிய அளவிலான கமத்தொழில் திட்ட பங்களிப்பு நிகழ்ச்சித்திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு வருட காலமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த நிகழ்ச்சித்திட்டம் 2023 யூன் மாதம் 30 ஆம் திகதி முடிவடையவுள்ளதோடு, இதன் மொத்த முதலீடானது 105 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். மகாவலி வலயங்களில் 4,000 குடும்பங்கள் அடங்கலாக நாடு முழுவதும் 57,500 குடும்பங்களை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் இந்தக் கருத்திட்டத்திடன் கீழ் அரசாங்க, தனியார் மற்றும் கமத்தொழில் உற்பத்தியாளர்களின் பங்களிப்புடன் விவசாய பெறுமதி சங்கிலி அபிவிருத்தி கருத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த கருத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான கடன் வசதிகளின் உச்ச கடன் எல்லையை 300,000/- ரூபாவிலிருந்து 500,000/- ரூபாவரை அதிகரிப்பத்றகும் இந்த கருத்திட்டங்களின் முயற்சி ஆக்குநர்களுக்கு சந்தை அல்லது வர்த்தக நடவடிக்கைகளை மேமப்டுத்துவத்றகுத் தேவையான உபகரணங்கள் அல்லது சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு 1.8 மில்லியன் ரூபா என்னும் உச்சத்தின் கீழ் இணைப்பொருத்த மானியங்களை வழங்குவதற்கும் இந்த முயற்சி ஆக்குநர்களுக்கு இயந்திர சாதனங்களை கொள்வனவு செய்வதற்கு 10 சதவீதம் கொண்ட வருடாந்த வட்டி வீதத்தின் கீழ் 09 மில்லியன் ரூபா என்னும் உச்சத்தின்கீழ் இணைப்பொருத்த கடன் வசதிகளை வழங்குவதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.