• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொரோனா தொற்று நிலைமையின் கீழ் தொடர்ச்சியாக தொலைக்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு மஹபொல மாணவர் உதவித் தொகையினை வழங்குதல்
- அனைத்து பல்கலைக்கழ கங்களிலும் சுமார் 50 சதவீதம் அதாவது 60,000 மாணவர்கள் மஹபொல புலமைப் பரிசில்களைப் பெற்றுக் கொள்கின்றனர். மாணவர் ஒருவருக்கு மாதாந்தம் 5,000/- ரூபா வீதம் வழங்கப்படுவதோடு, அதன்பொருட்டு 160 மில்லியன் ரூபா மாதாந்தம் செலவு செய்யப்படுகின்றது. இந்த தொகையிலிருந்து 51 சதவீதம் மஹபொல நிதியத்திலிருந்தும் மீதி 49 வீதம் பொதுத் திறைசேரியினாலும் ஏற்கப்படுகின்றது. பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தாலும் தொலைக்கல்வி வழிமுறையின் ஊடாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால், விடுதி கட்டணம், தொலைபேசி கட்டணம் போன்ற செலவுகள் ஏற்க வேண்டியிருப்பதை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பொருத்தமானவாறு தேவையான நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் உரிய வகையில் மஹபொல புலமைப்பரிசில் பயனாளிகளுக்கு உரிய கொடுப்பனவுகளைச் செய்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.