• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020 யூன் மாதம் 12 சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிரான தினத்திற்கு ஒருங்கிணைவாக ஊழியர்களை பணிக்கமர்த்தக்கூடிய ஆகக்குறைந்த வயதினை 16 வயதாக அமையும் விதத்தில் உரிய தொழில் சட்டங்களைத் திருத்துதல்
- 2020 யூன் மாதம் 12 ஆம் திகதியன்று இடம்பெறும் 'சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிரான தினத்திற்கு' ஒருங்கிணைவாகவும் 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தில் 'நென பல சஹித்த லமா பரபுரக்' என்னும் தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நாட்டிலுள்ள சகல சிறுவர்களுக்கும் சருவதேச சிறுவர் உரிமைகள் நியதிச்சட்டத்திற்கு அமைவாக கிடைக்க வேண்டிய சிறப்புரிமைகள் மற்றும் உரிமைகளுக்குள்ள உரிமையினை உறுதி செய்வதற்காக கட்டாய பாடசாலைக் கல்வி வயதுக்கு ஏற்ற விதத்தில் ஊழியர்களை பணிக்கமர்த்தும் ஆகக்குறைந்த வயததெல்லையை 16 வயதாக அதிகரிக்கும் நோக்கில் பின்வரும் தொழில் சட்டங்களைத் திருத்துதுவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

1. 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க (129 ஆம் அதிகாரம்) வர்த்தக நிலையங்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பற்றிய (சேவை மற்றும் சம்பளம் முறைப்படுத்தல்) சட்டம்.

2. 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தும் சட்டம்.

3. (135 ஆம் அதிகாரம்) ஆகக்குறைந்த சம்பள (இந்தியத் தொழிலாளர்கள்) கட்டளைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டம்.

4. 1942 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிற்சாலைகள் கட்டளைச்சட்டம்.

5. 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக 1958‑10‑31 ஆம் திகதியிடப்பட்ட அரசாங்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்.