• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறைச்சாலை கைதிகளின் பிணை விண்ணப்ப பத்திரங்களை பரிசீலனை செய்வதற்கும் விளக்கமறியலை நீடிப்பதற்கும் வீடியோ கலந்துரையாடல் முறைமைகளைப் பயன்படுத்துதல்
- நாடு முழுவதிலுமுள்ள 23 சிறைச்சாலைகளில் சுமார் 15,000 விளக்கமறியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பொதுவாக இவர்களுள் சுமார் 5,400 பேரை நாளாந்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துதல் வேண்டும். தற்போது நாட்டில் நிலவும் நிலைமை அதேபோன்று கடந்த காலத்தில் பல சந்தர்ப்பங்களில் விளக்கமறியல் கைதிகளை அழைத்துச் செல்லும் போது பேருந்துகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக கைதிகளும் அதேபோன்று சிறைச்சாலை உத்தியோ கத்தர்களும் உயிரிழந்துள்ளதை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, சிறைச்சாலை களில் இருக்கும்போதே அவர்களுடைய பிணை விண்ணப்பங்களை வீடியோ கலந்துரையாடல் முறைமைகளைப் பயன்படுத்தி நீதிமன்றத்திலே பரிசீலனை செய்யும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் 23 நீதிமன்றங்கள் மற்றும் 4 சிறைச்சாலைகளில் 12 இடங்கிளல் உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.