• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கான வாடகை வீட்டுக் கருத்திட்ட
- தூர பிரதேசங்களிலிருந்து தொழில் நிமித்தம் கொழும்புக்கு வரும் நடுத்தர வகுப்பினர்களுக்கு தங்குவதற்கு இயலுமாகும் வகையில் வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்கும் பொருட்டு ஆகக்கூடிய சதுர அடியாக 350 சதுர அடிகளைக் கொண்ட 'ஸ்டுடியோ' வகையிலான வீடுகளை நிர்மாணிக்கும் பொருட்டு கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க பிரதான நெடுஞ்சாலைகள் மற்றும் புகையிரத பாதைகள் மூலம் சேவை வழங்கப்படும் பிரதான நகரத்திலிருந்து 3-5 கிலோ மீற்றர் சுற்றளவுக்குள் இத்தகைய வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவத்றகுத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.