• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை காப்புறுதி ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவின் காப்பீட்டுக் கணிப்பாளர் ஆலோசனைச் சேவையை வழங்குத
- உலக வங்கி நிதியத்தின் கீழ் "இலங்கை நிதிப் பிரிவை நவீனமயப்படுத்தும் கருத்திட்டம்" நடைமுறைப்படுத்தப்படுவதோடு, இலங்கை காப்புறுதி ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு இந்தக் கருத்திட்டத்தை செயற்படுத்தும் பங்குதாரர் ஒருவராக செயலாற்றுகின்றது. கருத்திட்டத்தின் கீழ் காப்புறுதி துறையின் அபிவிருத்தி / நவீனமயப்படுத்தல் சாா்பில் அண்ணளவாக 9 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் ஆக்கக்கூறுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஐந்து ஆலோசகர்களை இணைத்துக் கொள்வதற்கு இலங்கை காப்புறுதி ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதோடு, இதன்கீழ் காப்பீட்டுக் கணிப்பாளர் தேர்ச்சி ஆலோசனைச் சேவையை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கேள்வி நடவடிக்கைமுறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சர வையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதமியுரைக் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 02 வருட காலததிற்கு நெதர்லாந்தின் திரு.டெயுஸ் மௌரிக் அவர்களுக்கு வரி அடங்கலாக 4 இலட்சம் ஐக்கிய அமெரிக்க டொலர்களை செலுத்துவதற்கு உட்பட்டு, குறித்த மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.