• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசளை கொள்வனவு - 2020 (ஏப்ரல்)
- மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பனி மற்றும் Colombo Commercial Fertilizer Company Ltd., நிறுவனம் என்பன சார்பில் 2020 ஏப்ரல் மாதத்தி்ல் இறக்குமதி செய்யப்படவேண்டிய இரசாயன பசளைத் தொகையினை இறக்குமதி செய்யும் பொருட்டிலான கேள்வியினை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு பின்வரும் நிறுவனங்களுக்கு வழங்கும் பொருட்டு மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் தழுவு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பனி மற்றும் Colombo Commercial Fertilizer Company Ltd., நிறுவனம் என்பன சார்பில் 27.400 மெற்றிக் தொன் யூரியாவை (Granular) + 5% மெற்றிக் தொன் ஒன்று 270.74 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் M/s Valency International Trading Pvt. Ltd. நிறுவனத்திற்கும்.

* Colombo Commercial Fertilizer Company Ltd., நிறுவனம் என்பன சார்பில் 2,040 மெற்றிக் தொன் யூரியாவை (Prilled) + 5% மெற்றிக் தொன் ஒன்று 288.30 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் M/s Swiss Singapore Overseas Enterprises Ltd., நிறுவனத்திற்கும்.

* வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பனி சார்பில் 3,000 மெற்றிக் தொன் Triple Super Phosphate + 5% மெற்றிக் தொன் ஒன்று 263.00 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் M/s Golden Barly International Trading Pvt. Ltd. நிறுவனத்திற்கும்.