• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 - பிரதம அமைச்சரினாலும் ஏனைய அமைச்சர்களினாலும் அவர்களுடைய கட்சி / அபேட்சகத்தன்மையை மேம்படுத்துவதற்கு உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் உத்தியோகபூர்வ வீடுகளை பயன்படுத்துதலும் இது சம்பந்தமாக அரசாங்கத்திற்கு தொகை யொன்று செலுத்தும் தேவையும்
- அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் தற்போது 8 ஆவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதோடு, இதற்கிணங்க பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயினும், பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடாத்தப்படும் வரை பிரதம அமைச்சரும் அமைச்சர்களும் அவர்களுடைய உத்தியோகபூர்வ பணிகளை நிறைவேற்றுவதோடு சபாநாயகரும் எதிர்கட்சித் தலைவரும் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களாக அதன் உத்தியோகபூர்வ பணிகளில் கலந்துகொள்ள வேண்டியுள்ளது. அதேபோன்று மேற்கூறப்பட்டவர்கள் இந்த காலப்பகுதிக்குள் அவர்களுடைய கட்சி மற்றும் அபேட்சகத்தன்மையை மேம்படுத்தும் பணிகளையும் மேற்கொள்வதனால் அவர்களுடைய உத்தியோக பூர்வ வாகனம் மற்றும் உத்தியோகபூர்வ வீடுகளை பயன்படுத்துவதன் சார்பில் அவர்கள் அரசாங்கத்திற்கு தொகையொன்றினைச் செலுத்துவது பொருத்தமான தென அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2015 பொதுத் தேர்தல் நடாத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பின்பற்றப்பட்ட வழிமுறையின் பிரகாரம் மேற்குறிப்பிட்ட பதவிகளை வகிக்கின்றவர்கள் பின்வருமாறு நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.

* அவர்களுடைய கட்சி / அபேட்சகத்தன்மையை மேம்படுத்துவதற்காக உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்துவார்களாயின் வாகன மொன்று சார்பில் 100,000/- ரூபா வீதம் மாதாந்த கட்டண மொன்றைச் செலுத்துதல்.

* உத்தியோகபூர்வ வாகனங்களுக்காக வழங்கப்படும் எரிபொருள் அளவினைவிட மேலதிகமாக தேவைப்படும் எரிபொருளுக்காக செலவாகும் தொகையினை அவர்கள் தனிப்பட்ட வகையில் ஏற்றல்.

* அவர்களுடைய கட்சி / அபேட்சகத்தன்மையை மேம்படுத்துவதற்காக விமானங்கள் அல்லது ஹெலிகப்டர்கள் பயன்படுத்தப்படுமாயின் அதற்கான சகல செலவுகளையும் அவர்கள் தனிப்பட்ட வகையில் ஏற்றல்.

* அவர்களுடைய கட்சி / அபேட்சகத்தன்மையை மேம்படுத்துவதற்காக அவர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்துவார்களாயின் அதன் பொருட்டு 100,000/- ரூபாவைக் கொண்ட மாதாந்த கட்டண மொன்றைச் செலுத்துதல்.