• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மின் விநியோகத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்த உதவும் கருத்திட்டம் - பொதி 7: லொட் A 2: பியகம கிரிட் உபநிலையத்தில் நிலையான var முறைமையொன்றை (+ 100 MVar) தாபித்தல்
- இலங்கை மின்சாரசபைக்குச் சொந்தமான அனுப்பீட்டு மற்றும் விநியோக வலையமைப்பை பலப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மின் விநியோகத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்த உதவும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 115 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்று வழங்கப்பட்டுள்ளதோடு, இந்தக் கருத்திட்டத்தின் கீழ் பியகம கிரிட் உபநிலையத்தில் + 100 MVar நிலையான var முறைமையொன்றை தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உரிய ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s. Hyosung Heavy Industris Corporation நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.