• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கம்பி வடங்கல் மற்றும் கடத்தி வகைகளை இலங்கை மின்சாரசபை உட்பட அதன் இணை நிறுவனங்களினால் கொள்வனவு செய்யும்போது உள்நாட்டு உற்பத்தி யாளர்களுக்கு முன்னுரிமை வழங்குத
- அண்மையில் இலங்கை மின்சாரசபை உட்பட அதன் இணை நிறுவனங்களுக்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள சுங்கவரிச் சலுகை காரணமாக உள்நாட்டு உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் வௌிநாட்டு உற்பத்திகளின் விலை குறைவாக உள்ளமையினால் இலங்கை மின்சாரசபையும் அதன் இணை நிறுவனங்களும் வௌிநாட்டு உற்பத்திகளை அதிகமாக கொள்வனவு செய்வதற்கு ஆர்வம் கொண்டுள்ளதோடு, இது உள்நாட்டு கம்பி வடங்கல் உற்பத்தி கைத்தொழிலுக்கு பிரதிகூலமான விதத்தில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமையின் கீழ் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு நியாயமான போட்டியினை உறுதி செய்யும் பொருட்டு இலங்கை மின்சாரசபை உட்பட அதன் இணை நிறுவனங்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கம்பி வடங்கள், கடத்தி வகைகளை மற்றும் கல்வனைஸ் செய்யப்பட்ட இரும்பு போன்ற பொருட்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் கொள்வனவு செயற்பாட்டின் போதும் கேள்விகளை மதிப்பிடும் போதும் தற்போது நடைமுறையிலுள்ள உள்நாட்டு உற்பத்தி யாளர்களுக்கு வழங்கும் 20 சதவீத முன்னுரிமைக்கு மேலதிகமாக கூடுதலாக சலுகையொன்றாக இத்தகைய பொருட்கள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்யும் சந்தர்ப்பத்தில் ஏற்புடையதாகும் வரிகள் அனைத்தையும் உரிய இறக்குமதியாளர் செலுத்தவேண்டுமெனக் கருதி தொழினுட்ப மதிப்பீடுகளைச் செய்யும் பொருட்டு மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.