• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு முறைமையினை கொள்வனவு செய்தல்
- கொழும்புக்கு அண்மித்த பிரதேசங்களுக்கான புகையிரத முறைமையினை விருத்தி செய்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் கடன் தொகையொன்று வழங்கப்பட்டதோடு, இந்த நிதியிலிருந்து ஒரு பகுதியினை இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு நாடு முழுவதும் தொலைத்தொடர்பு முறைமையினை கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டிலான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s.Dialog Axiata PLC மற்றும் M/s. Dialog Broadband Network (Pvt) Ltd., கூட்டுத் தொழிற்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.