• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனிக்குச் சொந்தமான வாழைச் சேனை கடதாசி தொழிற்சாலையின் உற்பத்தி பணிகளை பன்முகப்படுத் தப்பட்ட கருத்திட்டமொன்றாக மீண்டும் ஆரம்பித்தல்
- சாத்தியமான அரசாங்க தொழில்முயற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பது முன்னுரிமை பணியொன்றாக அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை பன்முகப்படுத் தப்பட்ட கருத்திட்டமொன்றாக மீள் கட்டமைத்து ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருகின்றன. தொழிற்சாலை மனையிடத்தில் சூரிய சக்தியின் ஊடாக மின்சாரம் பிறப்பித்தல், தொழிற்சாலை பணிகளுக்காக நீர் பெற்றுக் கொண்டதன் பின்னர் மேலதிக நீரை சுத்திகரித்து ஒரு பகுதியைப் பயன்படுத்தி குடிநீர் போத்தல்கள் தயாரிக்கும் தொழிற்சாலை யொன்றைத் தாபித்தல், வாழைச்சேனை தொழிற்சாலை அமைந்துள்ள காணியில் வெற்றுக் காணியாகவுள்ள பகுதியிலிருந்து பொருத்தமான 100 ஏக்கரை தெரிவு செய்து அதில் இந்தப் பிரதேசத்திற்கு ஏற்ற பயிர்ச் செய்கைகளைச் செய்தல், வேலைத்தளம் மற்றும் விடுமுறை பங்களா என்பவற்றை ஆரம்பித்தல் போன்ற துணைக் கருத்திட்டங்களுடன் உத்தேச பண்முகப்படுத்தப்பட்ட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.