• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தியகம சருவதேச விளையாட்டு கட்டடத் தொகுதியையும் விளையாட்டு கல்விக்கழகத்தையும் விளையாட்டுத்துறை பல்கலைக்கழகமொன்றாக அபிவிருத்தி செய்தல்
- கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம பிரதேச செயலகப் பிரிவின் தியகமவில் அமைந்துள்ள சுமார் 125 ஏக்கர் காணியில் விளையாட்டு கல்விக்கழகமும் சருவதேச விளையாட்டு கட்டடத் தொகுதியும் தேவையான சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்தில் முன்மொழியப்பட்டுள்ளவாறு தேசிய விளையாட்டுத்துறை பல்கலைக்கழக மொன்றைத் தாபிப்பதற்கு இயலுமாகும் வகையில் இந்த விளையாட்டுக்கட்டடத் தொகுதியின் வடிவமைப்பினை மாற்றி அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதேபோன்று உத்தேச விளையாட்டுத்துறை பல்கலைக்கழமொன்றைத் தாபிக்கும் செயற்பாட்டிற்கு உரியதான சகல விடயங்களையும் ஆராய்ந்து சிபாரிசினை சமர்ப்பிப்பதற்காக ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழத்தின் ஆரம்ப துணைவேந்தராக கடமையாற்றிய கலாநிதி (திரு) சந்திரா எம்புல்தெனியவின் தலைமையில் கல்வியாளர் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்குப்பட்டது.