• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கல்வி வௌியீட்டுத் திணைக்களத்தினால் 2021ஆம் ஆண்டு சார்பில் இலவசமாக விநியோகிக்கப்படும் பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் 45 சதவீதமான பகுதியை திறந்த கேள்வி செயல் முறையிலிருந்து விலகி அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குதல்
- 2018 ஆம் ஆண்டிலும் 2019 ஆம் ஆண்டிலும் பாடசாலைப் பாடபுத்தகங்களில் ஒருபகுதியினை அச்சிடுவதற்கு கேள்விச் செயல்முறையிலிருந்து விலகி நேரடியாக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது இதற்கிணங்க, இந்தக் கூட்டுத்தாபனத்திற்குள்ள ஆற்றல் மற்றும் முன்னைய செயலாற்றுகையையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 2021 ஆம் ஆண்டிற்குத் தேவையான மொத்த பாடசாலை பாடப்புத்தகங்களிலிருந்து ஒருபகுதியை அச்சிடுவதற்கான ஒப்பந்தத்தை திறந்த கேள்வி செயல் முறையிலிருந்து விலகி அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.