• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைத் தாபிப்பதற்காக உத்தேச காணியினை கொள்வனவு செய்தலும் கட்டடத் தொகுதியினை நிர்மாணித்தலும்
- இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைத் தாபிப்பதற்காக காணித் துண்டொன்றை கொள்வனவு செய்வதற்கு 70 மில்லியன் ரூபா அமைச்சரவையின் அங்கீகாரத்தின் மீது ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயினும், தற்போதைய பெறுமதிக்கு இணங்க இந்தக் காணியை சுவீகரிப்பதற்கு சுமார் 92 மில்லியன் ரூபா தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த காணியை சுவிகரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட தொகையை 92 மில்லியன் ரூபா வரை அதிகரிக்கும் பொருட்டு உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.