• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட CFC Founding கம்பனியை கலைத்து மூடுதல்
- கொழும்பு துறைமுக நகர கருத்திட்டத்தில் நிதி நகரத்தினைத் தாபிக்கும் மற்றும் அதன் பணிகளை நடாத்திச் செல்லும் நோக்கில் 2016 ஆம் ஆண்டிலே எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட CFC Founding கம்பனியானது தாபிக்கப்பட்டுள்ளது. இந்த கம்பனியினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் விடயநோக்கெல்லையை மீளாய்வு செய்வதற்கு உரிய துறையில் விசேட நிபுணத்துவம் உள்ள நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு, இந்தக் கம்பனியைத் தொடர்ந்தும் நடாத்திச் செல்வது தேவையற்றதென இந்தக் குழுவினால் அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 319(ஆ) ஆம் பிரேரிப்பிலுள்ள ஏற்பாடுகளைப் பின்பற்றி இந்தக் கம்பனியை கலைத்து மூடுவதற்கு பொருத்தமானவாறு நடவடிக்கை எடுப்பதற்கும் இது தொடர்புபட்ட ஏனைய தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டும் திறைசேரிச் செயலாளருக்கு அதிகாரத்தினைக் கையளிப்பதற்குமாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.