• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசுடமை ஆதன அபிவிருத்தி நிறுவனமொன்றைத் தாபித்தல்
- அதிக பெறுமதிவாய்ந்த சில ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாத் துறைக்குரிய ஆதனங்களின் உரிமையானது பொதுத் திறைசேரி, ஊழியர் சேமலாப நிதியம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு மற்றும் இலங்கை வங்கி போன்ற நிறுவனங்களுக்குச் சொந்தமாகவுள்ளன. உதாரணமாக Grand Hyatt, Grand Oriental, Hilton போன்ற ஹோட்டல்களும் தாமரைக் கோபுர கடைத் தொகுதியையும் சுட்டிக்காட்டலாம்.
இத்தகைய நிறுவனங்களை தனிப் பிரிவொன்றின் கீழ் கொண்டு வருவதன் மூலம் மிகப் பெறுமதிவாய்ந்த "நிலையான ஆதன பட்டியலொன்று" தயாரிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, அத்தகைய ஆதனங்களை உள்வாங்குவதன் மூலம் இந்த நிறுவனங்களை எதிர்காலத்தில் விரிவுபடுத்துவதற்கான சாத்தியமும் நிலவுகின்றமை தெரியவந்துள்ளது. முக்கியமாக இத்தகைய ஆதனங்கள் மற்றும் சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்க வருமானத்தை அல்லது அரசாங்க கடன்படலை பயன்படுத்துவது சாதகமற்றதென்பதனால் உத்தேச நிறுவனம் போன்ற பெறுமதிவாய்ந்த ஆதனங்களைக் கொண்ட நிறுவனமொன்றின் ஊடாக தேவையான நிதியினைப் பெற்றுக் கொள்வது எளிதாகும். இதற்கிணங்க, Canwill Holdings Pvt. Ltd. (Grand Hyatt), Hotel Developers Pvt. Ltd. (Hilton) மற்றும் Grand Oriental Hotel ஆகிய நிறுவனங்களை பொதுத் திறைசேரி, இலங்கை வங்கி மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் என்பன உரிமை கோரும் ஒரு கம்பனியின் கீழ் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.