• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பிக்குமார் பல்கலைக்கழகத்தின் பல்நோக்க கட்டட நிர்மாணிப்பு ஒப்பந்தத்தை வழங்குதல்
- இலங்கை பிக்குமார் பல்கலைக்கழகத்தின் பல்நோக்க கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 384.41 மில்லியன் ரூபாவும் இந்த தொகைக்குரிய பெறுமதிசேர்க்கப்பட்ட வரியுடனுமான தொகைக்கு அநுராதபுரம் M/s Siridantha Construction Works மற்றும் Darinton Construction (Pvt.) Limited கூட்டுத் தொழில்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.