• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒபேசேக்கரபுரவில் (அருனோதய மாவத்தை, இராஜகிரிய) 300 வீட்டு அலகுகளை வடிவமைத்தலும் நிர்மாணித்தலும்
- "கொழும்பு நகர புத்துயிரளிப்புக் கருத்திட்டத்தின்" கீழ் ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் கடன் வசதியின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஒபேசேக்கரபுர வீடமைப்புக் கருத்திட்டம் 500 சதுர அடிகள் வீதம் கொண்ட 300 வீட்டு அலகுகளை கொண்டதாகும். இதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வடிவமைத்து நிர்மாணிக்கும் அடிப்படையில் 1,723.35 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s.Subasinghe Contractors (Pvt) Ltd. கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.