• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஸ்டேடியம் கமவில் 1,000 வீட்டு அலகுகளை வடிவமைத்தலும் நிர்மாணித்தலும்
- 2010 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் கொழும்பு நகரத்தில் குறைந்த வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வீட்டுத் தேவைகளுக்கான வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு "கொழும்பு நகர புத்துயிரளிப்புக் கருத்திட்டம்" ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்திற்குத் தேவையான நிதியிலிருந்து ஒரு பகுதி ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகையிலிருந்து வழங்கப்படுவதோடு, அதன் கீழ் ஸ்டேடியம் கம வீடமைப்புக் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, வீடொன்றின் பரப்பரளவு 550 சதுர அடிகள் வீதம் 1,000 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கப்படவுள்ளது இந்த 1,000 வீடுகளையும் வடிவமைத்து நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையின் சிபாரிசின் பிரகாரம் 5,950.95 மில்லியன் ரூபாவுக்கு M/s Acces Engineering PLC கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.