• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குறைந்த வருமானம் பெறுவோருக்கான உணவு பாதுகாத்தல்
- குறைந்த வருமானம் பெறுவோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி உணவு விநியோகத்தை உறுதி செய்வதற்கு "வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம்" என்னும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு 2020 சனவரி மாதம் 14 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை பின்வருமாறு துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலனோம்புகை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இது தொடர்பிலான தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
* வலது குறைந்தோர், விதவைகள், நிரந்தர வருமானம் இல்லாத முதியவர்கள் மற்றும் கடும் நோய்களுக்கு ஆளாகியுள்ளவர்கள் அடங்கலாக பத்து இலட்சம் பயனாளிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொதியொன்றை வழங்குதல்.
* உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தேயிலை, நாட்டரிசி, மா, பருப்பு மற்றும் நெத்தலி / கருவாடு / உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்கள் போன்ற உணவு வகைகள் அடங்கலாக தற்போது நிலவும் சந்தைப் பெறுமதியான சுமார் 1,007/- ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களை தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு 500/- ரூபாவுக்கு வழங்குதல்.
* லங்கா சதொச, கூட்டுறவு வர்த்தக வலையமைப்பு மற்றும் விசேடமாக கிராமிய பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அதிகாரம் பெற்ற விற்பனை நிலையங்கள் என்பவற்றை இணைத்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.