• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல் களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய தொழினுட்பத்துடன் கூடிய கொங்கிறீட் பெனல் சிக்கன நிரந்தர வீடுகளை நிர்மாணித்தல்
- இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய தொழினுட்பத்துடன் கூடிய நிரந்தர குறைந்த செலவில் (வீடொன்றிற்கான செலவு இலங்கை ரூபாவில் 1,280,000/- வீதம்) கொங்கிறீட் பெனல் சிக்கன வீடுகள் 28,000 நிர்மாணிப்பதற்கும் இதன் முதற்கட்டமாக 7,000 வீடுகளை கெலிகட் ஓட்டுடனான வீடுகளாக நிர்மாணிப்பதற்கும் ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆயினும் எதிர்பார்க்கப்பட்டவாறு கருத்திட்டத்திற்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்ள முடியாமற் போனதன் காரணமாக ஆரம்பத்தில் 1,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக இலங்கை வங்கியிடமிருந்து தவணைக் கடன் தொகையினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு பொதுத் திறைசேரியினால் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த கடன் தொகையை பயன்படுத்தி 1,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒப்பந்தக்காரரான YAPKA Development (Pvt.) Ltd. நிறுவனத்துடன் வர்த்தக உடன்படிக்கையொன்று ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளதெனவும் 2020 பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி உரிய கருத்திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதெனவும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.