• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தை தொடர்ந்தும் நடாத்திச் செல்தல்
– சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் பிற சர்வதேச பொறுப்புகள் சார்ந்து எழும் பிணக்குகளைத் தீர்க்கும் பொாருட்டு வலைய மைய நிலையமொன்றாக இலங்கை சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தை தாபிப்பதற்கு 2012 ஆம் ஆண்டில் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அமைச்சரவையினால் இந்த நிலையத்தை உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றாக தாபிப்பதற்கும் 2015 ஆம் ஆண்டில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க Sri Lanka International Arbitration Centre (Guarantee) Limited கம்பனியானது 2016 12 20 ஆம் திகதியன்று கூட்டிணைக்கப்பட்டுள்ளது. >br> சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தின் ஊடாக பெருமளவு வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு சில நாடுகள் செயலாற்றி வருகின்றதோடு, இலங்கையிலும் சர்வதேச நடுத்தீர்ப்பு மைய நிலையமொன்றைத் தாபிப்பதன் மூலம் இந்த வலயத்திலுள்ள நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகளின் போதான நடுத்தீர்ப்புகளை இந்த நாட்டிலுள்ள நடுத்தீர்ப்பு மைய நிலையத்திற்கு பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பது இலங்கைக்கு பொருளாதார ரீதியில் நன்மைபயக்கும். இதற்கிணங்க இலங்கையில் தற்பொழுது தாபிக்கப்பட்டுள்ள சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தை தொடர்ந்தும் சுயாதீனமாக நடாத்திச் செல்வதற்காக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதேபோன்று எதிர்காலத்தில் அரசாங்க நிறுவனங்களினால் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகளில் நடுத்தீர்ப்புக்குரிய ஏற்பாடுகளை உள்ளடக்கும் போது அத்தகைய நடுத்தீர்ப்பு நடவடிக்கைகள் இலங்கை சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவேண்டுமென்னும் ஏற்பாட்டினை குறித்த உடன்படிக்கைகளில் சேர்க்கவேண்டுமெனவும்கூட அமைச்சரவையினால் மேலும் தீர்மானிக்கப்பட்டது.