• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை Royal Asiatic சங்கத்தின் 175 ஆவது ஆண்டுநிறைவுக் கொண்டாட்டம்
– 1845 ஆம் ஆண்டில் அப்போதைய பிரித்தானிய ஆட்சியினரினால் தாபிக்கப்பட்ட இலங்கை Royal Asiatic சங்கத்தினால் அந்தக் காலக்கட்டத்தில் நாட்டின் அபிவிருத்தி மற்றும் முதலீடு சாத்தியத்தினை இனங்காணுதல் அரச ஆட்சிக்கட்டமைப்பினை ஒழுங்குபடுத்தல் மற்றும் கிராமிய மக்களின் வரலாற்று மற்றும் கலாசார பின்ணணி தொடர்பில் கல்விசார் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு, அந்த தகவல்களை ஆய்வு செய்து அது தொடர்பிலான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதன் மூலம் காலனித்துவ காலத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கியுள்ளது. இதற்கிணங்க, இந்த சங்கம் பிரித்தானியாவின் காலனித்துவ பகுதியில் பெயர்பெற்ற நிறுவனமொன்றாக செயலாற்றியுள்ளதோடு, ஆளுநர் உத்தியோகபூர்வமாக இந்த சங்கத்தின் போசகராக செயலாற்றியுள்ளார். அதேபோன்று சேர் பொன்னம்பலம் அருணாச்சலம், எச்.சீ.பி.பெல், போல் ஈ.பீரிஸ், பி.ஈ.பீ.தெரணியகல, செனரத் பரணவிதான, ஜீ.சீ.மென்டிஸ், சீ.ஈ.கொடகும்புற, ஜீ.பி.மலலசேக்கர போன்ற இலங்கையில் அப்போதிருந்த பிரசித்திபெற்ற கல்விமான்கள் பலர் இந்த சங்கத்தின் செயற்பாட்டு உறுப்பினர்களாக செயலாற்றியுள்ளனர்.
இந்த ஆண்டின் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதியன்று இந்த சங்கத்தின் 175 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் சார்பில் விசேட நிகழ்ச்சித்திட்ட மொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததோடு, நாட்டின் மேம்பாட்டிற்கு இந்த சங்கத்தினால் ஆற்றியுள்ள விசேட பணி மற்றும் நோக்கம் என்பவற்றை மெச்சும் பொருட்டு இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஏற்கும் செலவினை தழுவுவதற்காக 15 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை ஒதுக்கும் பொருட்டு புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.