• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாட்டில் நிதிசார் உள்ளடக்கலை மேம்படுத்தும் பொருட்டு "இலங்கைக்கான தேசிய நிதி சார் உள்ளடக்க தந்திரோபாயத்தை" (National Financial Inclusion Strategy) தயாரித்தலும் அமுல்படுத்தலும்
– பிரசைகள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் அனைவருக்கும் ஏற்கக்கூடிய நிதிச் செலவின் கீழ் தேவையான சந்தர்ப்பங்களில் முறையான நிதிச் சேவைகளை பெற்றுக் கொள்வது 'நிதிசார் உள்ளடக்கம்' எனப் பொருள்படும். கொடுப்பனவுகள், சேமிப்புகள், கடன்கள், காப்புறுதி மற்றும் ஓய்வூதியம் போன்ற நிதிசார் செயற்பாடுகள் மற்றும் சேவைகள் சார்பில் அணுகுவதற்கான வாய்ப்புகளை பிரசைகள் அனைவருக்கும் வழங்குவது உத்தேச நிதிசார் உள்ளடக்கம் பற்றிய இந்த தேசிய கொள்கையின் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் தொழிநுட்ப மற்றும் நிதி ஒத்துழைப்புடன் இலங்கை மத்திய வங்கியினால் உரிய தரப்பினர்களின் பங்களிப்புடன் இலங்கையில் நிதி உள்ளடக்கலை மேம்படுத்துவதற்காக 'தேசிய நிதி சார் உள்ளடக்க தந்திரோபாயம்' (National Financial Inclusion Strategy) மற்றும் இதன் பொருட்டான செயற்பாட்டுத்திட்டம் என்பன தயாரிக்கப்பட்டுள்ளன. கூறப்பட்ட தேசிய நிதி சார் உள்ளடக்க தந்திரோபாயத்தை உத்தேச செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.