• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய COVID – 19 நோய் பரவல் சூழமைவில் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்காசிய பிராந்தியங்களிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்துவதற்கு இலங்கை தூதரகங்களினால் பின்பற்றப்பட்டுள்ள நடவடிக்கைகள்
- தற்போது 2,700 இற்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்து 80,000 இற்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்குள்ளாகி புதிய COVID – 19 நோயானது 44 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் எவரும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்களென பதிவுசெய்யப்படவில்லையெனவும் இந்த நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களினால் அவர்களுடைய பாதுகாப்பு மற்றும் நலனோம்பலின் பொருட்டு எடுத்துள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக பதில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. அதேபோன்று எதிர்காலத்தில் எழக்கூடிய நிலைமைகள் சம்பந்தமாக தாமதமின்றி தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு இயலுமாகும் வகையில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சினால் இந்த நடவடிக்கைகள் பற்றி மிக நெருக்கமான அவதானிப்புகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றதெனவும் அமைச்சர் மேலும் சமர்ப்பித்த தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.