• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள இறைவரி நிருவாக முகாமைத்துவ தகவல் முறைமையின் RAMIS 2.0 பகுதி B யின் மென்பொருளை மாற்றுவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- வரி நிருவாக செயற்பாட்டின் அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக 2016 ஆம் ஆண்டிலிருந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் RAMIS முறைமையானது பயன்படுத்தப்பட்டு வருகின்றதோடு, இதன் மூலம் அரசாங்க வங்கிகள் உட்பட பிற நிறுவனங்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் இணையசேவை ஊடாக தொடர்புபடுவதற்கும் இடைமுகம் வழங்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை துரிதமாக செயற்படுத்தும் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, RAMIS 2.0 - B என தயாரிக்கப்பட்டுள்ள RAMIS 2.0 மென்பொருளின் மீதிப் பகுதியை மாற்றுவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 15,534,364 சிங்கப்பூர் டொலர்கள் கொண்ட தொகைக்கு Singapor Cooperation Enterprise நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.