• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெரிய வெங்காயத்திற்கான அரசாங்கத்தின் ஆகக்குறைந்த உத்தரவாத விலையை உயர்த்துவதன் மூலம் பெரிய வெங்காய விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல்
- 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்தில் மூலம் பெரிய வெங்காய உற்பத்தியின் பொருட்டு புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்து வதற்கும் இந்த உற்பத்தி பொருளை இறக்குமதி செய்வதற்கு செலவாகும் கூடிய அந்நிய செலாவணியை பயிர்செய்கை பண்ணும் விவசாயிகளின் வருமானமாக மாற்றுவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு அவர்களுடைய அறுவடைக்கு நியாயமான விலையினை வழங்கி பயிர்ச்செய்கையின் பொருட்டு அவர்களை ஊக்குவிப்பதற்கு பெரிய வெங்காயம் சார்பில் அரசாங்கத்தின் உத்தரவாத விலையினை அதிகரிக்க வேண்டுமெனவும் இந்த பயிர்ச் செய்கைக்கு காணிகளை உச்ச விளைதிறனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கும் பொருத்தமான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அத்தியாவசியமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்காக தற்போது வழங்கப்படும் 60/- ரூபாவைக் கொண்ட உத்தரவாத விலையை 80/- ரூபா வரை அதிகரிப்பதற்கும் பெரிய வெங்காய செய்கையின் விளைவுப் பெருக்கத்தை உயர்த்துவதன் மூலம் உற்பத்தியினை அதிகரிக்கச் செய்வதற்குமாக மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் விசேட நிகழ்ச்சித் திட்டமொன்றை துரிதமாக நடைமுறைப்படுத்துவத்றகும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.