• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கழிவுகளை கொண்டு செல்வதற்காக கூடையுடன் கூடிய "குறும்பெட்டியா" பல்பணி துவிச்சக்கர வண்டிகளைப் பெற்றுக் கொள்ளல்
- மக்கள் செறிவு அதிகரித்துள்ளமை மற்றும் தற்போதைய நுகர்வுமுறை என்பன காரணமாக சுற்றாடலுக்கு விடப்படும் கழிவின் அளவு அதிகரித்துள்ளது கழிவுகளை திரட்டுவதற்கு கெம்பெக்ட்டர் வாகனங்கள் அல்லது உழவு இயந்திரங்கள் இலகுவாக செல்லமுடியாத துணை வீதிகளில் கழிவுகளை ஒன்றுதிரட்டும் பணியானது கை உழவு இயந்திரங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. உள்நாட்டு புத்தாக்குநரான Nation Eye Pvt. Limited கம்பனியானது இத்தகைய துணை வீதிகளுக்கு இலகுவாக செல்லக்கூடிய சுற்றாடல் பாதிப்புகள் குறைந்த சுமார் 250 - 300 கிலோ கிராம் எடையினை கொண்டு செல்லக்கூடிய கூடையுடனான "குறும்பெட்டியா" என்னும் துவிச்சக்கர வண்டியினை உற்பத்தி செய்துள்ளது. இந்த 10 துவிச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்து முன்னோடி கருத்திட்டமொன்றாக உள்ளூராட்சி நிறுவனங்கள் சிலவற்றுக்கு வழங்கி அதன் சாத்தியத் தன்மையைப் பொறுத்து ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இத்தகைய துவிச்சக்கர வண்டிகளை வழங்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க பல்பணி 10 துவிச்சக்கர வண்டிகளை ஒன்று 180,000/- ரூபா வீதம் 1.8 மில்லியன் ரூபா தொகைக்கு கொள்வனவு செய்து மத வழிப்பாட்டுத் தளங்கள் மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ள உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கும் பொருட்டு பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.