• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் உள்ளூராட்சி விருத்தி செய்யும் துறைசார் கருத்திட்டத்தின் கீழ் கிராந்துரு கோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விருத்தி செய்தல், இயந்திர மற்றும் மின் வேலைகள் தொடர்பிலான ஒப்பந்தங்களை வழங்குதல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் உள்ளூராட்சி விருத்தி செய்யும் துறைசார் கருத்திட்டத்தின் கீழ் 46.78 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட நிதி ஏற்பாடானது ஊவா, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் நீர்வழங்கல் திட்டங்களை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கிராந்துரு கோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விருத்தி செய்தல், இயந்திர மற்றும் மின் வேலைகள் என்பனவற்றுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 330.10 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு கஹதுடுவ, பொல்கஸ்ஓவிட்ட, வாசிறி - சாவிந்த கூட்டுத் தொழில்முயற்சிக்கு வழங்கும் பொருட்டு பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.