• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு ரத்மலான சர்வதேச விமான நிலையம் என்பவற்றின்பால் விமான கம்பனிகளை ஈர்ப்பதற்கான பிரேரிப்பு
- மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் கிரமமான சருவதேச கால அட்டவணையின்படி விமான பயணங்களின் கையாள்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் கொழும்பு ரத்மலான சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நோக்கில் இந்த விமான நிலையத்தை மேம்படுத்தும் பொருட்டும் சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் >br> * 60 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட விமான நிலைய வௌிச் செல்லும் வரியினை இந்த விமான நிலையத்தில் அறவிடுதலை இரண்டு வருட காலத்திற்கு முழுமையாக கைவிடுதல்.
* இந்த விமான நிலையத்திலிருந்து வௌியேும் புலம்பெயர் ஊழியர்களுக்கான கட்டணங்களுக்கு கழிவொன்றினை வழங்குதல்.
* இந்த விமான நிலையத்தின் தரைக் கையாள்கை கட்டணத்திற்கான கழிவு விகிதாசாரமொன்றை வழங்குதல்.,br> * சலுகை விலைக்கு விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் வழங்குதல்.
* மேம்பாட்டு ஊக்குவிப்பொன்றாக ஒரு (01) வருட காலத்திற்கு அட்டவணைப்படுத்தப்பட்ட சருவதேச விமான கம்பனிகளின் தரை இறங்கல் மற்றும் விமானங்களை நிறுத்தி வைத்தல் கட்டணங்களை கைவிடுதல்

கொழும்பு ரத்மலான சர்வதேச விமான நிலையம்

* ஒரு (01) வருட காலப் பகுதிக்கு 60 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட விமான நிலைய வௌிச் செல்லும் வரியிலிருந்து 50 சதவீதத்தை மாத்திரம் அறிவிடுதல். >br> * சலுகை விலைக்கு விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் வழங்குதல்.
* மேம்பாட்டு ஊக்குவிப்பொன்றாக ஒரு (01) வருட காலத்திற்கு அட்டவணைப்படுத்தப்பட்ட சருவதேச விமான கம்பனிகளின் தரை இறக்கல் மற்றும் விமானங்களை நிறுத்தி வைத்தல் கட்டணங்களை கைவிடுதல்