• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'உங்களுக்கு ஒரு நாடு - நாட்டுக்கு ஒரு எதிர்காலம்' தூய்மையான பணியிடம் - வேலை செய்யும் நாடு என்னும் தொனிப்பொருளில் சிரமதான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துத
- 'சுபீட்சத்தின் நோக்கு' தேசிய கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 'உங்களுக்கு ஒரு நாடு - நாட்டுக்கு ஒரு எதிர்காலம்' தூய்மையான பணியிடம் - வேலை செய்யும் நாடு என்னும் தொனிப்பொருளின் மூலம் பொது மக்கள் சார்ந்த அரசாங்க சேவையொன்றை உருவாக்கும் பொருட்டு பயனுள்ள சேவை நிலையத்திற்கான சூழலை கட்டியெழுப்பி பணியாட்டொகுதியினரை ஊக்குவிக்கும் முக்கியத்துவம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிணங்க இலங்கை போக்குவரத்து சபை, புகையிரத திணைக்களம், இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதேபோன்று மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சினதும் போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சினதும் கீழ் இயங்கும் ஏனைய நிறுவனங்களின் நலன்புரிச் சங்கங்கள் மற்றும விளைவுபெருக்க குழுக்கள் என்பவற்றின் பங்களிப்புடன் அரசாங்க செலவின்றி 2020 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்று ஒருநாள் சிரமதான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை மூன்று (03) மாதத்திற்கு ஒருமுறை நடாத்துவதற்குமாக மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரும் போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சரு மானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.