• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்குத் தேவையான சேவைகளை ஒரே இடத்தில் வழங்குவதற்கான வர்த்தக சேவை நிலையத்தினைத் (One Stop Shops) தாபித்தல்
- நாட்டில் 55 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிப்பினை நல்குமென மதிப்பிடப்பட்டுள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளின் மூலம் 03 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதோடு, இது நாட்டின் மொத்த தொழில் வாய்ப்பின் சுமார் 45 சதவீதமாகும். வர்த்தக சேவைகளை வழங்குவதற்காக நடைமுறையிலுள்ள நிறுவன ரீதியிலான வழிமுறைக்கு அமைவாக ஒரே பணியை பல்வேறுபட்ட நிறுவனங்களின் ஊடாக றே்கொள்தல் மற்றும் பெருமளவு காலம் எடுக்கின்றமை என்பன காரணமாக இந்த தொழில் முயற்சியாளர்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், நாட்டின் 25 மாவட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு தேவையான சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் 25 சேவை நிலையங்களை ஆரம்பிப்பதற்கும் மாவட்ட செயலகத்தினால் ஏனைய உரிய அரசாங்க நிறுவனங்கள் மற்றும் உரிய தரப்பினர்களின் ஒத்துழைப்புடன் இந்த சேவை நிலையங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆளுநர் சபையொன்றின் ஊடாக இந்த சேவை நிலையங்களை முகாமிப்பதற்கும் உரியதாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.