• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"ஹெல சுவய" இரசாயனமற்ற பாரம்பரிய நெற்செய்கை
- பாரம்பரிய நெல் வகைகளை பயன்படுத்தி இரசாயன பசளைகள் மற்றும் கிருமிநாசினிகள் போன்றவற்றைப் பயன்படுத்தாது நெற்செய்கை நிகழ்ச்சித் திட்டமொன்று அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலையீட்டில் "ஹெல சுவய" அமைப்பின் ஊடாக அநுராதபுரம் மாவட்டத்தின் இராஜங்கனைப் பிரதேசத்தினை முதன்மையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நெல் மூலம் பெறப்படும் அரிசி உட்பட இந்த அரிசி சார்ந்ததாக உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகளை நுகர்வதன் மூலம் தொற்றாத நோய்களினால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலனோரை இதிலிருந்து விடுவித்துக் கொள்ளலாமென அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு முன்னோடிக் கருத்திட்ட மொன்றாக அநுராதபுரம் இராஜங்கனைப் பிரதேசத்தில் 2,000 விவசாயிகள் 10,000 ஏக்கரில் "ஹெல சுவய" பயிர்ச் செய்கைக்காக ஈடுபடுத்தும் பொருட்டு மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.