• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
INNOTECH 2020 - தொழினுட்ப மற்றும் புத்தாக்க கண்காட்சி
சமூகத்தின் சகல மட்டத்திலும் விஞ்ஞான அறிவினை மேம்படுத்துவதற்கும் உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுகளின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் நோக்கில் இந்த அமைச்சினால் 'INNOTECH 2020 - தொழினுட்ப மற்றும் புத்தாக்க கண்காட்சி' என்னும் பெயரில் கண்காட்சியொன்றை 2020 மார்ச் மாதம் 11 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதிவரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க உரிய தரப்பினர்களின் பங்குபற்றலுடன் இந்தக் கண்காட்சியை ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் நடாத்தும் பொருட்டு உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.