• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்கலைக்கழக அனுமதியினை பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் "மஹபொல புலமைப்பரிசில்" தவணைத் தொகையை அதிகரித்தலும் இந்த புலமைப்பரிசில் வாய்ப்புகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துதலும்
– குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலிருந்து பல்கலைக்கழக கல்வி வாய்ப்பு கிடைக்கப்பெறும் மாணவர்களுக்கும் சிறந்த பெறுபேறுகளை பெறும் மாணவர்களுக்கும் மாதாந்த நிதி உதவியினை வழங்கும் பொருட்டு "மஹபொல புலமைப்பரிசில்" நிகழ்ச்சித்திட்டமானது 1982 ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஏற்பாடானது "மஹபொல புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால்" மாதாந்தம் பல்கலைக்கழங்களுக்கு விடுவிக்கப்படும். தற்போது பல்கலைக்கழக அனுமதிக்காக உரிமை பெறும் 30,000 மாணவர்களிலிருந்து சுமார் 15,000 பேர்களுக்கு "மஹபொல புலமைப்பரிசில்" வழங்கப்படுகின்றது. இந்த எண்ணிக்கையை 20,000 வரை அதிகரிப்பதற்கும் தற்போது மாதாந்தம் செலுத்தப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை அதிகரிப்பதற்கும் இயலுமாகும் வகையில் நிதியத்தின் தற்போதைய நிதி தொகையான 10.5 பில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையை 2025 ஆம் ஆண்டளவில் 20 பில்லியன் ரூபாவாக அதிகரித்துக் கொள்ளும் பொருட்டு கண்டறியப்பட்டுள்ள திறமுறை அணுகுமுறையொன்றின் கீழ் விசேட சில நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.